காத்தலும், அழிப்பும், படைப்பும், அருள் தரலும்,
நீரே செய்வதாய் நம்புகிறோம் இன்று வரை…
ஆற்றல் மிகவுடையீர்! திசையெங்கும் புலனுடையீர்!
சீரழிவு காணீரோ? சினங்கொள்ள மாட்டீரோ?
ஆயிரம் தாமரையில் ஒன்று குறைந்ததென்று,
பங்கய விழி கொண்டு, மாலவன் பூசித்தான்…
அன்னவன் பூசனைக்கு ஆயுதம் பரிசளித்தீர்!
இன்றெமது அர்ச்சனைகள் உம்மளவும் எட்டலையோ?
விழியென்ன? கையோடு காலிரண்டும் கொடுத்தவர் நாம்.
எச்சங்கள் ஏதுமின்றி உயிர்களையும் கொடுத்துவிட்டோம்!!
ஆயுதங்கள் கேட்கவில்லை! அதைப் பிடிக்கத் தெம்புமில்லை!
வாழவிடும் எங்களையும், எம் அடையாளம் சாகாமல்…….
1 கருத்து:
மிகவும் உணர்ச்சிபூர்வமான ஆக்கம்...
வாழ்த்துகள்...
தங்களின் அடுத்த பதிவு எப்போது இடம்பெறும்?
கருத்துரையிடுக