புதன், 25 ஜனவரி, 2012

வாய் திற சீதா....

வாய் திற சீதா...
உன் உற்றவன் புகழைச் சரித்திரங்கள் எல்லாம் வாய் கிழியப் பாடியது இன்னமுமா போதவில்லை??? உன் பக்கத்து நியாயங்களையும் கேட்டுவிடுவோம்... இப்போதாவது வாய் திற....
ராமனைக் கைத்தலம் பற்றி நீ மிதிலையை நீங்கையில், வில்லாய் வளைந்து கொடுக்கச் சொன்ன உன் தந்தையை நீ கேட்கவில்லை.. ''சிவதனுசையே உடைத்தவன் கையில் நானும் வில்லாகவோ?????'' என்று.... அன்று தொடங்கியது உன் ஊமைப் பயணம்....
உடன் பிறந்த தம்பியையும் உடையவளாய் உன்னையும் உடனழைத்துச் சென்ற உன் கணவன் உத்தமன்.... அவனைப் பின் தொடர்ந்த நீ பத்தினி....ஆனால் தானும் உடன் வருவேன் என்ற ஊர்மிளையை உறுதியாய் மறுத்துத் தான் மட்டுமாய் காடேகிய இலக்குவனோடு ஒத்தால் உயர்ந்து நிற்கும் உன் கணவனின் உயரம் அரை இஞ்சி குன்றி விடாதா????
அரக்கி என்றும், நயவஞ்சகி என்றும், பிறன் மனை விளைந்தாள் என்றும் சூர்ப்பனகையைக் குற்றவாளியாக்கினான் உன் கணவன்.... குற்றத்தைச் சுட்டிக் காட்டலாம், ஆனால் நீதிபதியாய் இருந்து தண்டனையை நிறைவேற்ற உன் கணவன் ஒன்றும் அயோத்தியின் மன்னன் அல்லவே??? வெறும் காட்டைச் சுற்றும் யாத்திரீகன் தானே???அவனோடு சேர்ந்த இலக்குவனும் அன்றோ தாழ்ந்து போனான்???? ஒரு பெண்ணாய் இருந்து நீ இன்னொரு பெண்ணின் அவமானத்தைக் கூட சகித்தாக வேண்டுமா சீதா??? மிதிலையிலே வார்த்தைகளுக்கா பஞ்சம்??? அகப்பட்டவள், தூதுவனாய் வந்தவன் உன் மணவாளனின் அரக்கனிடம் கணையாழியைக் காட்டியபோதும் அவனோடு ஏன் செல்ல மறுத்தாய்??? உன் கணவனின் வீரத்துக்கு இழுக்கு என்று நினைத்தாயோ??? உன்னைச் சிறைப் பிடித்தவன் அரக்கனாகவே இருந்திருந்தால் உன் ராமநாம ஜெபம் உன் பெண்மையைக் காத்திருக்குமா????

தூதுவன் அந்த வாயுபுத்திரனுக்கு இலங்கையையே தீக்கிரையாக்குமளவிருந்த கோபத்தின் நூறில் ஒரு பங்கு உன் கணவனுக்கிருந்திருந்தால் '' இன்று போய் நாளை வா....'' என்பானா???? உன் கற்பு ஊசலாடுகையில் தன வீரத்தைப் பறைசாற்றியவனின் வீரச் சரித்திரத்தைத் தானே நாங்கள் கேட்டோம்??? நீ அப்போதேனும் வாய்திறந்தாயா????

'' நீ மட்டுமா தனித்திருந்தாய்??? அவனும் தானே துணியை நீங்கியவன்??? '' என்ற வழமையான வாதங்கள் வலுவற்றன தான்.... அவன் தான் மாற்றாந்தாயால் வலிக்க வலிக்கச் சூடு கண்டவனாயிற்றே??? இன்னொரு பெண்ணைக் கனவிலேனும் தீண்டுவானா???? ஆனாலும் உன் உடலைத் தீண்டாத தீ உன் உள்ளத்தைத் தகிக்கவில்லையா??? அண்ணனின் இழிசெயலால் மூண்ட சினத்தைக் கொண்டே தீயை மூட்டுவித்த ஒரு உத்தமனிச் சந்தேகித்த பாவத்தின் பலன் என்றெண்ணித் தான் தீயிடைப் புகுந்தாயோ???

போகட்டும் எல்லாம் போகட்டும்... எவனோ ஒருவன் எதோ உளறினான் என்பதற்காய் உன்னை மீண்டும் காடுபுகச் சொன்னான் என்பதுதான் நம்பும்படியாக இல்லை... நீயே சொல்.... உண்மையைச் சொல்... ஊரறிய ஒருமுறையும் தனிமையிலே பலமுறையும் உனக்குத் தினம் தினம் அக்கினிப் பிரவேசம் தானா பெண்ணே???? பொறுக்காமல் தான் ஆசை என்ற போர்வையிலே காடேகினாயா??? உன்னை வேவு பார்க்கத் தான் தம்பியையே தேரோட்டியாக்கினானோ???

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.... வண்ணான் பேச்சின் பரிசு தான் வனவாசம் எனில் அவன் உன்னைத் தன் வாரிசுகளைப் பெற்றுப் போடும் கருவியாகக்கூட மதிக்கவில்லையே சீதா??? நிறைமாதக் கர்ப்பிணி நீ??? பிரசவம் பற்றி நீ என்னதான் அறிந்திருந்தாய்??? ஜன்னி கண்டு நீ செத்தே போயிருந்தால் அவன் ஏற்றிய அந்த சுமைகளின் கதி என்ன????

சிவதனுசை ஒற்றைக்கையால் ஏந்தியவள் நீ.... உன்னை ஊமையாக்க யாரால் இயலும்???? இத்தனையும் செய்துவிட்டு உத்தமன் போர்வை போர்ப்பவனிடம் என்ன பேசி என்ன பலன் என்று தான் மௌனம் காத்தாயோ????

இலங்கையாண்ட தமிழனை அசுரனாக்கிய இந்திய இரத்தம் தானே உன் உடம்பிலும்???? நீ ஊமையாயிருப்பதே நலம்...........

வியாழன், 7 ஏப்ரல், 2011

வேண்டுகை!!!


காத்தலும், அழிப்பும், படைப்பும், அருள் தரலும்,
நீரே செய்வதாய் நம்புகிறோம் இன்று வரை…
ஆற்றல் மிகவுடையீர்! திசையெங்கும் புலனுடையீர்!
சீரழிவு காணீரோ? சினங்கொள்ள மாட்டீரோ?
ஆயிரம் தாமரையில் ஒன்று குறைந்ததென்று,
பங்கய விழி கொண்டு, மாலவன் பூசித்தான்…
அன்னவன் பூசனைக்கு ஆயுதம் பரிசளித்தீர்!
இன்றெமது அர்ச்சனைகள் உம்மளவும் எட்டலையோ?
விழியென்ன? கையோடு காலிரண்டும் கொடுத்தவர் நாம்.
எச்சங்கள் ஏதுமின்றி உயிர்களையும் கொடுத்துவிட்டோம்!!
ஆயுதங்கள் கேட்கவில்லை! அதைப் பிடிக்கத் தெம்புமில்லை!
வாழவிடும் எங்களையும், எம் அடையாளம் சாகாமல்…….

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

சொல்லடீ சக்தி…




இன்றோடு இன்றோடு என் சோகம் யாவும்......
உன்னிடம் கொட்டினேன் உதவவும் வேண்டும்......
என்னோடு உறவாடும் என் கூட்டின் மிருகம்......
தெய்வங்கள் ஆகிட வழிகாட்டு நீயும்......

அறியாமைக் கடலுக்குள் மூழ்காமல் நானும்.....
போராடிப் போராடிக் கரையேற வேண்டும்.....
இருளுக்குள் எனைத் தள்ளிப் பெருங்கூச்சல் போடும்.....
இச்சைகள் காற்றோடு கற்பூரமாகும்.....

பிறவியின் புனிதத்தைத் தொலைத்தது தீது!
மோட்சமும், முக்தியும் இனியெனக்கேது?
என் விதி கண்டு நீ மனமிரங்கக்கால்,
கொளுத்திடு தீமையின் வேரையும் சேர்த்து…..

இது நாடல்லக் காடென்று கூறுவேனாகில்,
தன் இனம் காத்திட மற்றொன்று உதவும்...........
விலங்கிலும் கொடியதாய்த் தன்னதை மாய்க்கும்,
மானுடம் எவ்வழி மேன்மையைக் காணும்?????

குழந்தைகள் வீதியில் அலைதலைக் கண்டும்,
பிணங்களைக் குவித்திடும் தலைவர்கள் ஆளும்,
நாடுகள் எப்படி மேலானதாகும்??? - இது
கலியல்ல கலிக்கும் ஏழரைச்சனி பிடித்த காலம்…….

இருளிலே தவித்ததாம் பூலோகம் என்று
விடுவிக்க வந்ததாம் பன்றியும் ஒன்று!
அரசியற் சாக்கடையில் புரளுதடி உலகம்........
உன் பலம் அறிய அடியேற்கு இது தக்க தருணம்!

வெகுளாதே சக்தி நீ வெகுளுதல் நியாயம்….
ஆனாலும் நம் நாட்டின் நிலைமை பாரதூரம்
செவிசாய்ப்பாய் நீ, எந்தன் அறிவுரைக்கல்ல
அடியேன் நான் அறிந்தது செய்திகளின் ஆழம்…..

உனதண்ணன் சூளுரைத்துக் கிளம்புவானாகில்
பொறுக்கச்சொல், துணையின்றி மீளுதல் கடினம்…..
தலை சீவித் தரை வீழ்த்தும் போரல்லத் தாயே -  இஃது
உறவாடிப் பகை தீர்க்கும் பாவிகள் உலகம்.

கூசாமல் பொய் பேசித் தம் வசப்படுத்தி, நாட்டின்
ஆட்சியில் பங்களித்துக் கூட்டாளியாக்கி,
ரத்தத்தைத் தீர்த்தமென்றும், பிணங்களைப் படையலென்றும்
நம்பவைத்துக் கழுத்தறுக்கும் சகுனிகளும் சேர்த்தி….

திரிசூலம் இருக்குதென்று இறுமாந்திருப்பாய், அது
உனதல்லத் தனதென்று வழக்காடி ஜெயிப்பர்!
கூண்டினுள் அடைபடுவாய்! சொல்லொணாத் துயர் படுவாய்!
பாவி நீ பெண்ணாகப் பிறந்ததையே நொந்திடுவாய்

ஓடாதே ஓடாதே நில்லடி சக்தி,
நீ கண்ட வழியொன்று, வேறென்ன? பக்தி……
பக்தியால் ஆவதென்ன? புரியவில்லை சேதி……
சொல்லிவிட்டு ஓடலாம், நில்லடி சக்தி….

மன்றாடி மன்றாடி உனைக் கேட்டேன் நீதி......
வீணிலே சாகுமோ மானுடச் சாதி?
ஓம் சக்தி ஓம் சக்தி சக்தியென் சக்தி.....
பக்தி தான் ஈயுமோ சன்மார்க்க முக்தி?

தீது கண்டு வாடாமல் விழியிரண்டு மூடி.....
இயலாமை மறைக்க மற்றவரைச் சாடி.....
நிலையற்ற செல்வத்தை நாள்தோறும் தேடி.....
வாழுதல் பக்தியால் நெறியாகுமோடி?

வாய் திற சீதா....


உன் உற்றவன் புகழைச் சரித்திரங்கள் எல்லாம் வாய் கிழியப் பாடியது இன்னமுமா போதவில்லை??? உன் பக்கத்து நியாயங்களையும் கேட்டுவிடுவோம்... இப்போதாவது வாய் திற....
ராமனைக் கைத்தலம் பற்றி நீ மிதிலையை நீங்கையில், வில்லாய் வளைந்து கொடுக்கச் சொன்ன உன் தந்தையை நீ கேட்கவில்லை.. ''சிவதனுசையே உடைத்தவன் கையில் நானும் வில்லாகவோ?????'' என்று.... அன்று தொடங்கியது உன் ஊமைப் பயணம்....
உடன் பிறந்த தம்பியையும் உடையவளாய் உன்னையும் உடனழைத்துச் சென்ற உன் கணவன் உத்தமன்.... அவனைப் பின் தொடர்ந்த நீ பத்தினி....ஆனால் தானும் உடன் வருவேன் என்ற ஊர்மிளையை உறுதியாய் மறுத்துத் தான் மட்டுமாய் காடேகிய இலக்குவனோடு ஒத்தால் உயர்ந்து நிற்கும் உன் கணவனின் உயரம் அரை இஞ்சி குன்றி விடாதா????
அரக்கி என்றும், நயவஞ்சகி என்றும், பிறன் மனை விளைந்தாள் என்றும் சூர்ப்பனகையைக் குற்றவாளியாக்கினான் உன் கணவன்.... குற்றத்தைச் சுட்டிக் காட்டலாம், ஆனால் நீதிபதியாய் இருந்து தண்டனையை நிறைவேற்ற உன் கணவன் ஒன்றும் அயோத்தியின் மன்னன் அல்லவே??? வெறும் காட்டைச் சுற்றும் யாத்திரீகன் தானே???அவனோடு சேர்ந்த இலக்குவனும் அன்றோ தாழ்ந்து போனான்???? ஒரு பெண்ணாய் இருந்து நீ இன்னொரு பெண்ணின் அவமானத்தைக் கூட சகித்தாக வேண்டுமா சீதா??? மிதிலையிலே வார்த்தைகளுக்கா பஞ்சம்???
அரக்கனிடம் அகப்பட்டவள், தூதுவனாய் வந்தவன் உன் மணவாளனின்  கணையாழியைக் காட்டியபோதும் அவனோடு ஏன் செல்ல மறுத்தாய்??? உன் கணவனின் வீரத்துக்கு இழுக்கு என்று நினைத்தாயோ??? உன்னைச் சிறைப் பிடித்தவன் அரக்கனாகவே இருந்திருந்தால் உன் ராமநாம ஜெபம் உன் பெண்மையைக் காத்திருக்குமா????

தூதுவன் அந்த வாயுபுத்திரனுக்கு இலங்கையையே தீக்கிரையாக்குமளவிருந்த கோபத்தின் நூறில் ஒரு பங்கு உன் கணவனுக்கிருந்திருந்தால் '' இன்று போய் நாளை வா....'' என்பானா???? உன் கற்பு ஊசலாடுகையில் தன வீரத்தைப் பறைசாற்றியவனின் வீரச் சரித்திரத்தைத் தானே நாங்கள் கேட்டோம்??? நீ அப்போதேனும் வாய்திறந்தாயா????

'' நீ மட்டுமா தனித்திருந்தாய்??? அவனும் தானே துணையை நீங்கியவன்? '' என்ற வழமையான வாதங்கள் வலுவற்றன தான்.... அவன் தான் மாற்றாந்தாயால் வலிக்க வலிக்கச் சூடு கண்டவனாயிற்றே? இன்னொரு பெண்ணைக் கனவிலேனும் தீண்டுவானா? ஆனாலும் உன் உடலைத் தீண்டாத தீ, உன் உள்ளத்தைத் தகிக்கவில்லையா??? அண்ணனின் இழிசெயலால் மூண்ட சினத்தைக் கொண்டே தீயை மூட்டுவித்த ஒரு உத்தமனைச் சந்தேகித்த பாவத்தின் பலன் என்றெண்ணித் தான் தீயிடைப் புகுந்தாயோ???

போகட்டும்!! எல்லாம் போகட்டும்... எவனோ ஒருவன், எதோ உளறினான் என்பதற்காய் உன்னை மீண்டும் காடுபுகச் சொன்னான் என்பதுதான் நம்பும்படியாக இல்லை... நீயே சொல்.... உண்மையைச் சொல்... ஊரறிய ஒருமுறையும் தனிமையிலே பலமுறையும் உனக்குத் தினம் தினம் அக்கினிப் பிரவேசம் தானா பெண்ணே???? பொறுக்காமல் தான் ஆசை என்ற போர்வையிலே காடேகினாயா??? உன்னை வேவு பார்க்கத் தான் தம்பியையே தேரோட்டியாக்கினானோ???

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.... வண்ணான் பேச்சின் பரிசு தான் வனவாசம் எனில் அவன் உன்னைத் தன் வாரிசுகளைப் பெற்றுப் போடும் கருவியாகக்கூட மதிக்கவில்லையே சீதா??? நிறைமாதக் கர்ப்பிணி நீ!! பிரசவம் பற்றி நீ என்னதான் அறிந்திருந்தாய்??? ஜன்னி கண்டு நீ செத்தே போயிருந்தால், அவன் ஏற்றிய அந்தச் சுமைகளின் கதி என்ன????

சிவதனுசை ஒற்றைக்கையால் ஏந்தியவள் நீ.... உன்னை ஊமையாக்க யாரால் இயலும்???? இத்தனையும் செய்துவிட்டு உத்தமன் போர்வை போர்ப்பவனிடம் என்ன பேசி என்ன பலன் என்று தான் மௌனம் காத்தாயோ????

இலங்கையாண்ட ஈழத்தமிழனை அசுரனாக்கிய இந்திய இரத்தம் தானே உன் உடம்பிலும்???? நீ ஊமையாயிருப்பதே நலம்...........